துரை தயாநிதிக்கு என்னாச்சு? வேலூர் CMC-க்கு ஓடிய மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன மு க ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரி மகன் துரை தயாநிதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி தனது வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தது மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 14ஆம் தேதி காலை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட துரை தயாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை குறித்து விசாரித்துள்ளார்.

நாடாளுமன்ற பொது தேர்தலின் போது வேலூருக்கு வந்த மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்று சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துரை தயாநிதி குறித்து விசாரித்தார்.

இந்த நிலையில் கடந்த 55 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் துரை தியானதியின் சிகிச்சை விவரங்கள் குறித்து நேற்று இரவு மு க ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். துரை தயாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்கள் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் விளக்கியுள்ளனர். 

தற்போது வரை துரை தயாநிதிக்கு என்ன ஆனது? எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin visited Vellore CMC and inquired durai dhayanithi well being


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->