Mr.10.5% சிதறிக்கிடந்த வன்னியர்களை சிந்திக்க வைத்த குறும்படம்! கிடைத்த அமோக வரவேற்பும், ஏற்பட்ட மாற்றமும்! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான சமூக நீதி என்பது ஒரு நொடியில் எளிமையாக கிடைத்துவிடவில்லை. கிட்டத்தட்ட 40 வருட தொடர் போராட்டம், 40 வருடங்களாக ஆட்சி செய்த அனைத்து கட்சிகளிடம் வைக்கப்பட்ட மாபெரும் கோரிக்கை. அவர்கள் இழைத்த அநீதி, சூழ்ச்சியின் முடிவு, பல துரோகங்கள், எதிர்ப்புகள், வன்ம பேச்சுக்கள். இறுதியில் மருத்துவர் இராமதாஸின் போராட்டத்திற்கு கிடைத்த முதற்படி வெற்றி எம்.பி.சி பிரிவில் 10.5 உள் ஒதுக்கீடு. 

இந்த சமூக நீதிக்கான போராட்டத்தை பற்றி கூற தொடங்கினால், 500 பக்கமும் போதாது. அவ்வுளவு போராட்டங்கள், அரசுக்கு மனுக்கள் என்று தொடர்ந்து கொண்டே செல்லும். 40 வருடமாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கேட்டு போராடினாலும், பாமக சார்பில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல முன்னோடி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking: வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: திமுக விஷமப்  பிரச்சாரம்..! - மருத்துவர் இராமதாஸ்..! - Seithipunal

முதுமை என்னை வாட்டினாலும், கோலூன்றி நடக்கும் சூழல் ஏற்பட்டாலும், இந்த ஊமை மக்களுக்காகவும், தமிழக மக்களின் வாழ்க்கைக்காகவும் இறுதி வரை போராடி உயிரை விடுவேன் என்று அன்றே சூளுரைத்தார் மருத்துவர் இராமதாஸ். விவசாய பெருங்குடியாக வாழ்ந்து வரும் வன்னிய பேரினம், ஒருவேளை உணவுக்காகவும், அவர்கள் வாழும் கிராமத்தின் வளர்ச்சிக்காகவும் ஏங்கி போராடும் சூழ்நிலை இன்று பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லை. 

காரணம்., வன்னியர்கள் மீதான எதிர்ப்பும், வன்னியர்கள் ஜாதி வெறியர்கள் என்று அடையாளப்படுத்தி செய்யப்பட்ட விஷம பிரச்சாரங்களும் தான். ஏன் இந்த வன்னிய இனம் மீது ஆட்சியாளர்களுக்கு வன்மம் என்று யோசனை செய்தால், பல கேள்விக்குறியுடன் கேள்விகள் நீண்டுகொண்டே செல்லும். அந்த அளவிற்கு துரோகத்திற்கும், சூழ்ச்சிக்கும் உள்ளாகி பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழினம் என்றால் இலங்கை தமிழருக்கு அடுத்தபடியாக வன்னிய பேரினம் தான். 

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முக ஸ்டாலின் செய்த கேவலமான வேலை.,  கொந்தளிப்பில் நெட்டிசன்கள்.! - Seithipunal

ஒரு மாற்று சமூக ஆட்சியாளர் அவர் சார்ந்த சமூகத்திற்கு அரசுத்துறை மற்றும் பிற துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறார். அவர் நல்லவர் போல சித்தரிக்கப்படுகிறார். தனது உரிமைக்காக போராடிய இந்த இனம், வெறியர்களாக சித்தரிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள பல நிகழ்வுகளை தமிழக அரசியலில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்று சூளுரைக்கும் அரசியல் கட்சிகள் பேச தயங்குகிறது. மாற்றாக இவர்கள் கலவரக்காரர்கள் என்று விமர்சனம் செய்கிறது. 

இத்தனை சூழ்ச்சியிலும், இறுதிக்கட்ட நேரத்தில் போராடி சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கான 10.5 உள் ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்தும் எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில்., எத்தனை விஷம பிரச்சாரங்கள். ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முற்காலத்தில் செய்த தவறுகள், இன்று ஒரு இனத்தை சொந்த நாட்டிற்குள்ளேயே கலவரக்காரர்களாக சித்தரித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. 

மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த பாமக & வன்னியர் சங்கம்.!  களத்தில் இறங்கிய பொதுமக்கள்.! - Seithipunal

சரி விசயத்திற்கு செல்லலாம். இட ஒதுக்கீடு தொடர்பாக பல காணொளிகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள காணொளி மிஸ்டர் 10.5 % (Mr.10.5%). இடஒதுக்கீட்டின் ஒட்டுமொத்த பலனையும், இட ஒதுக்கீட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்த்து, விவசாய பெருங்குடி மக்களின் பிள்ளைகள் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற கூடாது என்று நினைக்கும் சில்வண்டு சில்லறைகளை செருப்பால் அடிப்பது போல உள்ள காட்சிகளும், வன்னியர்களின் இனக்காவலராக போற்றப்படும் மருத்துவர் இராமதாஸின் குரலில் கண்கலங்க வைக்கும் காணொளிகளும் இடம்பெற்றுள்ளது. 

மு.க ஸ்டாலின் நினைப்பது கனவில் கூட நடக்காது - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  மாஸ் பேச்சு..! - Seithipunal

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கான படி. அதனை சிதைக்க முயற்சித்தால் அல்லது இதனை வைத்து பிற சமூகத்திடையே எதிர்ப்பை வளர்ப்பது தமிழகத்தின் வளர்ச்சியை கட்டாயம் பாதிக்கும் என்பதே எதிர்மறையான நிதர்சனம். இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள தவறினால் அது உங்களுக்கும், உங்களது சமூகத்திற்கும், உங்களின் எதிர்காலத்திற்கும் பின்வரும் நாட்களில் பெரும் கேள்விக்குறியாக கட்டாயம் அமையும் என்பதை யாராலும் மாற்ற முடியாது. காலம் அதற்கான பதிலை விரைவில் உங்களிடம் சொல்லும். காத்திருங்கள்.

இந்த குறும்படத்தை தயாரித்து வழங்கியவர்களுக்கும், குறும்படத்தில் நடித்த, உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். வீடியோ: 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mr 10 5 Short Film Trend about Vanniyar Reservation Protest and Victory


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->