திமுக டெபாசிட் காலி.. எனது தம்பிகள் நினைத்தால்., மருத்துவர் அன்புமணி அதிரடி.! - Seithipunal
Seithipunal


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் வெற்றியடைவார். இந்த தேர்தலோடு திமுக டெபாசிட் இழக்க வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உரையாற்றினார். 

இந்த பிரச்சாரத்தில் பேசுகையில், " நாம் அனைவரும் விவசாயிகள். நமது விவசாயி மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டும். 

இங்கு வந்துள்ள எனது தம்பிகள், தங்கைகள், பாட்டாளி சொந்தங்கள், அதிமுகவினர், பாஜகவினர், த.மா.காவினர், பொதுமக்கள் மற்றும் வாக்காள பெருமக்கள் ஆகியோர் அனைவருக்கும் அன்புமணியின் வணக்கம். அனைவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்து அமோக வெற்றியடைய செய்ய வேண்டும்.

இந்த தேர்தல் நமக்கு மிக முக்கிய தேர்தல். இந்த கூட்டணி சமூகநீதி அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த தேர்தலோடு திமுக டெபாசிட் இழக்க வேண்டும். எனது தம்பிகள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் வெற்றியடைவார் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Talks about Edappadi Palanisamy Victory on Edappadi Constituency


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->