திருப்போரூரில் எதிர்க்கட்சி டெபாசிட் வாங்க கூடாது - மருத்துவர் இராமதாஸ்..! - Seithipunal
Seithipunal


திருப்போரூர் பாமக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது என மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை ஆதரித்து, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் திருப்போரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை ஆதரித்து, பிரச்சார கூட்டத்திற்கு தலைமைதாங்கும் அதிமுக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், த.மா.க நிர்வாகிகள், புரட்சி பாரதம் நிர்வாகிகள், பெருந்திரளான மக்கள், பாட்டாளி சொந்தங்கள் ஆகியோருக்கு வணக்கம். 

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, அருமை தாய்மார்களே, அன்பு சகோதரர்களே, அருமை பெரியோர்களே, திருப்போரூர் வாழ் மக்களே, வாக்காள பெருமக்களே அனைவருக்கும் வணக்கம். பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக வெற்றி வேட்பாளராக திருக்கச்சூர் ஆறுமுகத்தை வழங்கியுள்ளது. 

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக என்னுடன் பயணித்து, மக்கள் எந்த நேரத்தில் உதவி என்று அழைத்தாலும் அங்கு வந்து நிற்கும் திருக்கச்சூர் ஆறுமுகத்தை உங்களிடம் வேட்பாளராக நிற்க வைத்துள்ளோம். அவருக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றியடைய செய்ய வேண்டும். அவரை எதிர்த்து நிற்பவர் டெபாசிட் வாங்க கூடாது. அதுவே நீங்கள் அளிக்கும் சிறப்பு பரிசு " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Election Campaign at Thiruporur Constituency 24 March 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->