கணவரின் கொலைக்கு பழிவாங்க பலகொலைகள்.. பெண் தாதா எழிலரசி வேட்புமனுத்தாக்கல் செய்ய வருகையில் கைது.! - Seithipunal
Seithipunal


பெண் தாதா எழிலரசி எம்.எல்.ஏ ஆகும் ஆசையில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் திருமலைராயன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் சாராய வியாபாரியாக இருந்து பின்னர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

ராதாகிருஷ்ணனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டாவதாக எழிலரசி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ராதாகிருஷ்ணன் மற்றும் எழிலரசயை கொலை செய்ய திட்டமிட்ட வினோதா, கடந்த 2013 ஆம் வருடத்தில் காரைக்காலில் ராதாகிருஷ்ணனும் - எழிலரசியும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூலிப்படையை ஏவி கொலை செய்தார். 

இந்த சம்பவத்தில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், எழிலரசி உயிர் தப்பினார். தனது கணவரின் கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு எழிலரசி சபதம் ஏற்ற நிலையில், வினோதா காரில் செல்கையில் சீர்காழி அருகே கூலிப்படையை வைத்து எழிலரசி அவரை கொலை செய்தார். 

மேலும், ராதாகிருஷ்ணன் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராமு மற்றும் வைத்தி ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் சதித்திட்டம் தீட்டி சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட எழிலரசியை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி தனது கணவர் ராதாகிருஷ்ணன் கொலையில் முன்னாள் சபாநாயகர் சிவகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, கடந்த 2017 ஆம் வருடம் நிரவி பகுதியில் சிவகுமாரை கொலை செய்தார். 

முன்னாள் சபாநாயகர் கொலையிலும் எழிலரசிக்கு பங்கு இருந்ததால், அவரை காவல்துறையினர் கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து பத்து மாதங்கள் சிறையில் இருந்த அவர் கடந்த, 2017 ஆம் வருடம் நவம்பர் மாதம் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, தனது கணவரின் முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவர் ஆனந்தனையும் கொலை செய்ய திட்டமிட்டு, நட்சத்திர உணவகத்தில் 10 ரவுடிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்த நிலையில், இதனை முன்னதாகவே அறிந்து கொண்ட காவல்துறையினர் எழிலரசி உட்பட 10 ரவுடிகளையும் கொத்தாக கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி தனது இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றி வந்தார். இவர் மீது நான்கு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு காவல் துறையினர் ஆறு மாதமாக தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதற்குள்ளாக பாதுகாப்பு கருதி தேசிய அளவிலான ஒரு கட்சியிலும் எழிலரசி இணைந்ததாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றது. இந்நிலையில், நிரவி திருப்பட்டினம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எழிலரசியை கண்ட காவல்துறையினர், அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Rowdy Ezhilarasi Arrest by Police She Went Nominate Candidate Pondicherry Election 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->