தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஊரடங்கா?.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?.. சுகாதாரத்துறை செயலாளர் பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது, பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தாள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 1,700 க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரண்டாவது கொரோனா வைரஸ் பரவல் அச்சம் எழுந்துள்ளது. மேலும், தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமலாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், இரண்டாவது அலைக்கான அறிகுறிகள் தெரியவில்லை. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்தால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் பிரச்சனை இருக்காது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம்.

ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகும் பட்சத்தில், அந்த பகுதி மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக கருதப்படும். கடந்த வருடத்தை போல, ஒரு தெருவையே முழுமையாக அடைக்காமல், தொற்று பாதிக்கப்பட்டவரின் வீட்டில் கிருமி நாசினி தெளித்து தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பொருட்களை உள்ளாட்சி அமைப்பு வழங்கும். 

தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு என்ற வதந்தி பரவி வருகிறது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அதிகாரபூர்வமற்ற தகவலை மக்கள் நம்ப வேண்டாம். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Radhakrishnan IAS Pressmeet about No Lockdown After Election Voting 26 March 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->