பெண்களிடம் அத்துமீறினால் பால் ஊத்திவிடுவேன் - சீமான் ஆவேசம்..! நாடக காதல் கோஷ்டிஸ் கதறல்.! - Seithipunal
Seithipunal


பெண்களிடம் அத்துமீறும் காமுகர்கள் எனது ஆட்சியில் பாரபட்சமின்றி கொலை செய்யப்படுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.

திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு திறந்த வேன் மூலமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதன்போது சீமான் பேசுகையில், " பெண்களிடம் பாலியல் அத்துமீறல், ஆசிட் வீச்சு என்று யாரும் எனது ஆட்சியில் உயிரோடு இருக்க முடியாது. பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டால், பெண்ணின் உடலை முதலில் நல்லடக்கம் செய்ய கூடாது. குற்றவாளியை கொலை செய்துவிட்டு, பின்னர் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும். பெண்களிடம் அத்துமீறும் நபர்களுக்கு எனது ஆட்சியில் இதுவே தண்டனை. 

எனது ஆட்சியில் நாடெங்கிலும் சி.சி.டி.வி காட்சியின் கண்காணிப்பில் கொண்டு வருவேன். வீட்டின் அறைகளை தவிர்த்து பிற இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கொண்டு வரப்படும். இதனால் பெண்களிடம் அத்துமீறுதல், செயின் பறிப்பது, திருடுவது போன்ற குற்றங்கள் செய்ய முடியாது. அதுக்கு வாய்பில்லை ராஜா. அனைத்தையும் கண்காணித்து ஆப்படித்துவிடுவோம்.

விளையாட்டு திடல் இல்லாத பள்ளிக்கூடங்கள் என்பதே எனது ஆட்சியில் இருக்காது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது தான் வளர்ச்சி திட்டமா?. சீமான் கையேந்தினால் பிச்சை?., மொத்தமாக கையேந்தினால் இலவசம்?. 

மீண்டும் இரட்டை இலை, உதயசூரியன் என வாக்கு செலுத்தினால் குஷ்டம் தான் வரும். உங்களின் கஷ்டம் தீராது. அன்று வழிப்போக்கரை அழைத்து விருந்து வைத்த தமிழினம், இன்று சாலையில் பித்தையெடுத்துக்கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நான் போராடிவருகிறேன். நான் ஓட்டிற்கானவன் அல்ல., இந்த நாட்டிற்கான மகன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Election Campaign Speech about Death sing of Sexual Abuse Complaint in Seeman Govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->