பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு- முதல்வர் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், விருதுநகர் சிவகாசி அருகே செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்த துயர செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். 

உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்டு நடவடிக்கையை தீவிர படுத்த அறிவுறுத்தி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். 

உயிரிழந்த தொழிலாளர்கள் அது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தேர்தல் ஆணையம் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakasi firecracker factory Explosion CM condoles


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->