தொடரும் நீட் மரணம் || நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. அரியலூரில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் நிஷாந்தி அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். பொதுத்தேர்வில் 600 க்கு 539 மதிப்பெண்கள் பெற்றார். சிறுவயதில் இருந்த மருத்துவராக வேண்டும் என்ட கனவுடன் அவர் இருந்து வந்துள்ளார். இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு படித்து கொன்டிருந்த அவரை அவரது தாய் தூங்க சொல்லியுள்ளார். நீட் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் இன்னும் சிறிது நேரம் படித்து விட்டு தூங்குவதாக அவர் தாயிடம் தெரிவித்துள்ளார்.

தாயும் தம்பியும் தூங்கிய பின் அவரது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து வந்த தாய் அவர் தூகீல் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பரிசோதனைககாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரது அறையை ஆய்வு செய்தனர். அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை  கண்டெடுத்தனர்.

அந்த கடிதத்தில் அவர், சிறுவயதிலிருந்தே டாக்டராக் வேன்டும் என ஆசைப்பட்டேன்அதற்காக தீவிர பயிற்சியும் எடுத்தேன். ஒரு வேளை தேர்வில் தோற்றுவிட்டால் கனவு பொய்த்து விடும் என்ற பயத்தில் இந்த எடுக்கிறேண் என தெரிவித்துள்ளார். அந்த கடித்ததை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Committed Suicide In Ariyalur


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->