#Breaking: வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?.. தமிழக முதல்வர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கையில் பதில் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " சசிகலா குறித்து அமைச்சர் ஜெயக்குமார், கே.பி முனுசாமி ஆகியோர் தெளிவாக தெரிவித்துவிட்டனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது திரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சனை குறித்து அண்ணன் - தம்பி பிரச்சனை என தெரிவித்ததை, திரித்து பரப்பி வருகிறார்கள். 

சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் முடக்கப்பட்டது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர்கள் முடக்கியுள்ளார்கள். பிற கட்சித்தலைவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இயலாது. 

அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றியை அடையும். அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விரும்பும் நபர்கள் தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்யும். 

அதிமுகவை பிரிக்க வேண்டும், கட்சியின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று எண்ணி டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏக்களை அழைத்து சென்றார். எதிர்கட்சி தலைவர் அறியாமையில் இருந்து வருகிறார். அரசு ஊழியர்களுக்கு அதிமுக தலைமையிலான அரசின் போது தான் பல சிறப்பு உதவிகள் மற்றும் சலுகைகள் கிடைத்துள்ளது " என்று தெரிவித்தார்.

மேலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, " எந்தெந்த சூழலில் எதை செய்ய வேண்டுமோ, அந்தந்த சூழலில் அதனை சரியாக செய்வோம் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Pressmeet about Vanniyar Reservation MBC 10 Feb 2021 Omalur Selam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->