இத பண்ணா போதும்.. "36% மின் கட்டணம் சேமிக்கலாம்".. TANGEDCO கொடுத்த ஐடியா.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வீடுகளிலும், அலுவலகத்திலும் இயேசு இல்லாமல் இருக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் 24 மணி நேரமும் ஏசி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. இதனால் மின்சார தேவை அதிகரித்து மின்சார கட்டணமும் வழக்கத்தை விட அதிகமாக செலுத்த வேண்டிய சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். 

இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 36 சதவீதம் வரை மின் கட்டணத்தை சேமிக்கும் யோசனையை கொடுத்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் "உங்கள் ஏசியை 24-26 டிகிரி செல்சியஸில் வைப்பதன் மூலம் 36% மின் கட்டணத்தை சேமிக்கலாம் இன்றே உறுதி செய்திடுங்கள் பசுமையான சூழல் மற்றும் நிலையான சூழலை உருவாக்க முடியும்"என பதிவிட்டுள்ளது. 

இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஏசியை 18 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பயன்படுத்துவதால் அதிகப்படியான மின்சாரம் நுகரப்பட்டு மின் கட்டணமும் அதிகரிக்கிறது. அதனை தடுக்கும் வகையிலும் பொது மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இந்த யோசனையை வழங்கி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TANGEDCO given idea 36 persentage electricity bill savings


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->