#வீடியோ: மளிகை கடைக்குள் இருந்த பாம்பு.. வெடவெடுத்துப்போன மக்கள்..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள்.. சிலருக்கு பாம்பை பார்த்தவுடன் ஏற்படும் படபடப்பில், பதறியடித்து ஓடிவிடுவார்கள். சில சர்வ சாதாரணமாக கடந்து செல்வார்கள். இன்னும் சிலர் அதனை இலாவகமாக கையில் பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வார்கள். 

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லுர் பகுதியை சார்ந்தவர் ஷேக் உசைன் (வயது 24). இவர் பாம்புகளை இலாவாக பிடிப்பதில் வல்லவர் ஆவார். மேலும், குடியிருப்பு பகுதிகளில், விவசாய நிலங்களில் இருக்கும் பாம்புகளை வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அனுமதியுடன் பிடித்து, வனப்பகுதிக்குள் விடும் பணியை செய்து வருகிறார். 

இவர் கடந்த ஆறு வருடத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். மேலும், பாம்புகளை கொள்ள கூடாது என்றும், அவற்றை பாதுகாப்பது நமது கடமை என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடையநல்லூரில் இருக்கும் மதினா நகர் பகுதியில் மளிகை கடையில் பாம்பு ஒன்று இருப்பதாக ஷேக் உஷைனிற்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த உஷைன், பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Kadayanallur shop snake rescued by Snake catcher


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->