#Breaking: வனத்துறை விசாரணைக்கு சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரம்.. நிவாரணம் அறிவித்துள்ள முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலவார்குறிச்சி வாகைக்குளம் கிராமத்தை சார்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 65). இவரது விவசாய நிலத்தினை சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டதாக வந்த தகவலின் பேரில், கடையம் வனத்துறை அதிகாரிகள் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், முத்துவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, அவரை தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு மருத்துவர்களின் சோதனையில் அவர் இறந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், காவல் அதிகாரிகள் அடித்து கொலை செய்துவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபடவே, மீண்டும் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து மதுரை நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வனத்துறை விசாரணைக்கு சென்று மரணம் அடைந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அழிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், விவசாய குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றும், இது குறித்த விசாரணைக்கு பின்னர் தவறு இளைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi old man died forest dept police investigation CM Announce relief fund


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->