தமன்னாவை தெரியும்.. தகடூர் கோபியை தெரியுமா..? இந்நேரம் ஒரு சினிமாகாரன் இறந்திருந்தால் அழுதிருப்போம்.. இவர் தான் இன்றைக்கு நாம் படிக்கும் தமிழை உலகறிய....
தமிழ் எழுத்துக்களை நாம் இணையத்தில் படிக்கும் வகையில் யூனிகோடுக்கு மாற்றும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கித் தந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் தகடூர் கோபி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தமிழ் எழுத்துக்களை நாம் இணையத்தில் படிக்கும் வகையில் யூனிகோடுக்கு மாற்றும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கித் தந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் தகடூர் கோபி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தருமபுரி குமாரசாமிப்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தணிகாசலம் என்பவரின் மகனான இவருக்கு, மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.
கணினி பொறியியலில் பட்டம் படித்துள்ள இவர், சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மென்பொருள் துறையில் பணியாற்றியுள்ளார். இணைய உலகில் அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை கோபி உருவாக்கியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இவரது உடல் அன்று நள்ளிரவு தருமபுரியிலுள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
தற்போது கணினியில் தமிழ் மொழியை இன்று மிக எளிதாக காண முடிகிற இதே சூழல் 15 ஆண்டுகளுக்கு முன் கிடையாது.
பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சு பலகை முறை என தமிழ் சிதறிக்கிடந்தது.
அவற்றையெல்லாம் ஒருங்கே கிடைக்க கணினி தமிழ் ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அரும்பாடுபட்டனர். அவர்களில் ஒருவர் தான் தகடூர் கோபி.
இணைய உலகில் அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹை கோபி என்று தனது படைப்புகளை அடைமொழியாகக் கொண்டு கோபி அழைக்கப்படுகிறார்.
தர்மபுரி (தகடூர்) குமாரசாமி பேட்டையை சேர்ந்த கோபி, சிங்கப்பூர், ஹைதராபாத், சென்னை என பல்வேறு இடங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியவர்.
தமிழ் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றி தரும் அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய கருவிகளை உருவாக்கி தமிழ் உலகிற்கு பெரும் பங்காற்றினார்.
தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றிடும் கருவிகளையும் கோபி உருவாக்கி உள்ளார்.
English Summary
thagadoor gobi passed away