ஒரிஜினல் போலீஸ் முன்னிலையில், போலி போலீசை நையப்புடைத்த மக்கள்.. நாட்றாம்பள்ளியில் நச் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


காவல்துறை உடையை அணிந்துகொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட போலி காவல் ஆய்வாளருக்கு, பொதுமக்கள் தர்மஅடி வழங்கியுள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்ராம்பள்ளி பஞ்சூர் சுங்கச்சாவடி பகுதியில், நேற்று இரவு காவல்துறை உடையணிந்த நபரொருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். காவல்துறை சீருடையில் இருந்தாலும், அந்த நபரின் கால்களில் காவல்துறை அதிகாரிகளின் காலனி (ஷூ) இல்லாமலும், முறையான காவல்துறை அதிகாரி உடையிலும் வரவில்லை. 

இந்நிலையில், போலி காவல் அதிகாரி பஞ்சூர் சுங்கச்சாவடி அருகேயுள்ள தேநீர் கடைக்கு வந்த நிலையில், அங்கிருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் எந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு முறையான பதில் சொல்லாமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நாட்றம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவன் குடியாத்தம் பகுதியைச் சார்ந்த முருகதாஸ் என்பதும், காவல் அதிகாரி போல உடையணிந்து வந்துள்ள போலி காவல் அதிகாரி என்பதும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல்துறையினரின் முன்னிலையிலேயே முருகதாசை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். 

இதன் பின்னர், மக்களிடம் இருந்து முருகதாஸை காவல்துறையினர் மீட்டு, விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையில், ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கள்ள நோட்டு கும்பல், ரூபாய் 5 இலட்சம் பணத்துடன் தர்மபுரியை சேர்ந்த கள்ள நோட்டு கும்பலை சந்திக்க இருப்பதாகவும், குறிப்பிட்ட இடத்தில் ஐந்து இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு 10 இலட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிக்கொள்ளுகையில், முருகதாஸ் காவல் அதிகாரி போல வந்து மொத்த பணத்தையும் கொள்ளையடிக்க திட்டமிடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

மேலும், குவாட்டர் மற்றும் கோழி பிரியாணியுடன், சம்பளம் ரூபாய் ஆயிரம் பணம் வழங்கி முருகதாஸை போலி காவல் அதிகாரியாக நடிக்க வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், முருகதாஸை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கள்ளநோட்டு கும்பல் தொடர்பாகவும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Natrampalli Fake Police Sub Inspector Attacked by Local Peoples at


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->