பல்லடம் ச.ம.உ மகன் உட்பட 3 சிறுவர்கள் காட்டிற்குள் மாயம்.. பெற்றோர்கள் கண்டித்ததால் பழிவாங்க பதுங்கல்.! - Seithipunal
Seithipunal


பெற்றோர்கள் கண்டித்ததால் எதிர்ப்பு தெரிவித்து சிறுவர்களுடன் காட்டுக்குள் மாயமான பல்லடம் பகுதியில் வேட்பாளர் மகன் மீட்கப்பட்டுள்ளார். எஞ்சிய இரண்டு பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடத்தும் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியின் சார்பில் பல்லடம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை பிரச்சாரத்திற்கு கிளம்பிய தினகரனை, அவரது மகன் சுங்கச்சாவடி வரை அழைத்துச் சென்ற நிலையில், பின்னர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்துள்ளார். 

அதன் போது, தனது மகன் வீட்டிற்கு காலையில் இருந்து வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தந்தையுடன் மகன் சென்றிருப்பான் என்று எண்ணியுள்ளார்கள். இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகார் குறித்து விசாரணை செய்கையில், ராயர்பாளையம் அபிராமி நகரை சேர்ந்த சிறுவர்கள் 10 க்கும் மேற்பட்டோர், தங்கள் வீட்டிலிருந்து மளிகை பொருட்களுடன் அருகில் இருந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றது தெரியவந்தது. 

அங்கு பிரியாணி சமைத்து சாப்பிட்ட உடன் அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். இதில், தினகரனின் மகன் உட்பட 3 பேர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து காட்டுப்பகுதிக்குள் காவல் துறையினர் மூவரையும் தேடிச்சென்ற நிலையில், தினகரனின் மகன் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். 

விசாரணையில், பெற்றோர்கள் சிறுவர்களை படிப்பு ரீதியான விஷயத்தில் கண்டித்ததால், பெற்றோரை அச்சுறுத்த சிறுவர்களுடன் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டது தெரியவந்தது. மாயமான பிற 2 சிறுவர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Palladam MLA Candidate Son Missing on Forest Police Rescue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->