அதிமுக - த.மா.கா கூட்டணி எப்போது முடிவாகும்? - ஜி.கே வாசன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


அதிமுக - த.மா.க பேச்சுவார்த்தை சில நாட்களில் நிறைவு பெரும் என ஜி.கே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில், "பெண்கள் தங்களின் அயராத உழைப்பால் முன்னேறி வருகின்றனர். அவர்களின் உழைப்பிற்கு மிகுந்த மரியாதையை அளிக்கிறேன். தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையிலான மகளிரணி உறுப்பினர்கள், அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற உழைப்பார்கள். 

தமிழகம் மட்டுமே இந்தியாவில் மகளிருக்கான திட்டத்தை தந்துள்ளது. மகளிருக்கான பாதுகாப்பு திட்டம், சுயதொழில் பெருக்குதல் என்று பல்வேறு திட்டங்களை அதிமுக அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்க கடன்கள் ரத்து பெண்களுக்கு ஏற்படுத்திய திட்டமாக கருதுகிறேன். 

பெண்களுக்கு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளது. பெண்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க பிரகாசமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - த.மா.கா பேச்சுவார்த்தை சில நாட்களில் நிறைவு பெரும். 

அதிமுக தனது அனைத்து கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்து இறுதி முடிவுகளை எடுத்து வருகிறது. இதற்கான அவகாசத்தை வழங்கி சுமூகமான தேர்தல் உடன்பாட்டை ஏற்படுத்த அதிமுக - த.மா.க ஒத்துழைப்பு வழங்குகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMK President GK Vasan Pressmeet about ADMK TMK Alliance 6 March 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->