செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் தகவல்!|            |சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்... கொடூரமான முறையில் அழியப்போகிறது மனித இனம்... அறிகுறிகள் தென்பட ஆரம்பம்..!|            |தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திரம் முற்றிய அமைச்சர் வளர்மதி தொகுதி மக்கள்... ஆற்று மணலை திருடிக் கொண்டு ஊரைவிட்டே ஓடியது அம்பலம்.!|            |மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார்கள்... 'ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்து விடாதே' எச்சரித்த தோனி: அப்போது பாண்டியாவிற்கு நிகழ்ந்தது..?|            |எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்று உடையும் அதிமுக..! ஒன்றாக ஒட்ட வாய்ப்பே இல்லையாம்..!!

ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்: இந்தியாவுக்கு பாதிப்பில்லை..!

December 18, 2016 6:54 am
ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்: இந்தியாவுக்கு பாதிப்பில்லை..!

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தியதால், இந்தியாவுக்கு குறிப்பிடும்படியான பாதிப்பு இருக்காது என்று, மத்திய அரசின் மூத்த பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசோசேமின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய அர்விந்த் சுப்ரமணியன் மேலும் கூறியதாவது: ‘ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வால் மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்கு குறைந்தளவு பாதிப்பே ஏற்படும். சில நாட்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தது நமக்குச் சாதகமானது. குறைந்த வரி விகிதம் மற்றும் அதிகமான வரி விகிதம் ஆகிய இரண்டையும் சமன்செய்யும்வகையில் ஜி.எஸ்.டி. வரி அமைப்பு இருக்க வேண்டும். எளிதான ஜி.எஸ்.டி. அமைப்புதான் தற்போது பிரதமர் மோடி அறிவித்துள்ள பண மதிப்பிழப்புத் திட்டத்துக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். கருப்புப் பணத்துக்கு எதிராக அனைத்து அமைப்புகளும் தங்களுக்குள்ளே ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டுமெனில், நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் ஜி.எஸ்.டி.க்குள் வர வேண்டும்.

பண மதிப்பிழப்பால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதுதான் இந்தியப் பொருளாதாரத்துக்கு சவாலாக இருக்கும். நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் மொத்தவிலைக் குறியீடு ஆகிய இரண்டும் குறைவாக இருந்துவருகிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் மிகப்பெரிய சாதனையாக ஆதார், ஜன் தன் யோஜனா, மொபைல் எண்கள் ஆகியவை மிகப்பெரிய அளவுக்கு சென்றுசேர்ந்துள்ளன’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

App

சமீபத்திய செய்தி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல
சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்… கொட
தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திர
மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார
100 கோடி பொருளாதாரத்தையும்… 3,60,000 தமிழ
எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்ற
13 கோடியில் தங்கமே ஆடையாக.. மலைக்க வைக்கும் சரவ
அ.தி.மு.க., நினைத்தால் தமிழக நலனுக்காக தற்போது
அதிமுகவை கட்டுக்குள் கொண்டுவந்த எடப்பாடி!சத்தம்
குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும
ஏய் எதுக்கு ரெகார்ட் பண்ற, போட்டு கொடுக்க போறிய
தமிழக அரசியலையே புரட்டிப்போட : எஸ்.வி சேகர் கொட
நடிகை அமலா பாலின் கள்ளக்காதலன் இவரா..?
திகார் ஜெயில்ல விட்ட அடி இப்போ வேலை செய்யுதாமே&
விஜயகாந்தை போல ரஜினியையும் தூண்டிவிட்டு முடங்

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media