மீண்டும் காட்டுக்குள் அழைக்கும் The lost city of Z..!

மீண்டும் காட்டுக்குள் அழைக்கும் The lost city of Z..!

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் Amazon studios நிறுவனம் படங்களை தயாரித்து வருகின்றது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கும் The lost city of Z என்ற படத்தினையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை இயக்குனர் ஜேம்ஸ் கிரே இயக்கி உள்ளார். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களும் விருது பெற தேர்வாகும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பேர்சிவல் ஹாரிசன் பெவ்செட் என்ற அமெரிக்கரின் வாழ்க்கையை தழுவி டேவிட் கிரானால் எழுதப்பட்டு பெருமளவில் விற்பனையான புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியான இதன் டிரெய்லர் இதுவரை 16 லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது. சுமார் 1 நிமிடம் 14 நொடிகள் உள்ள இந்த டிரெய்லர் முழுவதும், காட்டிற்குள் நடைபெறும் காட்சிகளை விவரிக்கிறது.

டிரெய்லர் துவங்கும் போது ஒரு குரல் அங்கு காலாவதியான உணவு , பல்வேறு நோய்கள் , கொலைகார காட்டுமிராண்டிகள் உள்ளனர் என கூறி கதையை தொடங்குகின்றது. வாழ்கையின் அர்த்தங்களை நாம் கற்றுக்கொள்வோம் எனத் தொடங்கும் இதில், நாட்டிற்கு செல்ல வழி தேடி அலையும் சிலர் காட்டுவாசிகளிடம் சிக்கிக்கொண்டு தப்பிக்க முயற்சிப்பதாக டிரெய்லர் நகர்கிறது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media