துட்டு குடுத்து அரங்கேற்றும் சசிகலாவின் நாடகம், போயஸ் கார்டனில் நடக்கும் கேவலம்!

துட்டு குடுத்து அரங்கேற்றும் சசிகலாவின் நாடகம், போயஸ் கார்டனில் நடக்கும் கேவலம்!

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் பங்களா, மன்னார்குடி கோஷ்டியால் அழைத்துவரப்படும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. ஜெயலலிதா எனும் மாபெரும் அரசியல் ஆளுமை மறைந்துபோய்விட்டார் என்ற துயரம் எவர் முகத்திலும் இல்லை, மாறாக ஹாப்பியாக போயஸ் தோட்டத்தையே நாடக அரங்காக மாற்றியுள்ளனர் மாந்தர்குடி கும்பல்.

மறந்த முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் போயஸ் கார்டன் பங்களாவில் நாள்தோறும் ‘நாடக காட்சிகளை’ அரங்கேற்றி வருகிறார் மாஃபியா கும்பல் தலைவி சசிகலா. துட்டு கொடுத்து தம்மை சந்திக்க லெட்டர் பேடு காட்சிகளை வரவழித்தும், மிரட்டியும் சந்திக்க வருகின்றனர். அதே போல பணம் கொடுத்து அழைத்துவரப்பட்ட மாற்றுத் திறனாளிகளுடன் தரையில் அமர்ந்து பேசி ‘கனிவுடன்’ கோரிக்கைகளை கேட்டு அமர்க்களமான நாடகத்தை நடத்திவருகிறார் சசிகலா.

சடங்குக்காக ஜெயலலிதா படத்தை வைத்து அதன் முன்னர் நின்று அமைதிகாத்துவிட்டு நகர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஊடகங்களில், அரசியல் கூட்டங்களில் எதுவுமே வாய்திறக்காத கூட்டு சதி கும்பலின் தலைவி சசிகலாவை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் கட்டிக்காத்த அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக்கியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு நாள்தோறும் இப்படியான’நாடகங்களை’ நடத்துகிறது மன்னார்குடி கோஷ்டி.

 

இதில் நேற்று புதிய அவதாரத்தை வெளிப்படுத்தினார் சசிகலா. தம்மை சந்திக்க அழைத்துவரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிலருடன் தரையில் அமர்ந்து பேசினார். அவர்களுடன் கைகுலுக்கினார், பெண் ஒருவரின் கைகளைப் பிடித்து அன்பாக ‘குறை’களை கேட்டறிந்தார் என்கிற படங்களை அதிமுக வெளியிட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழை மக்களுடன் இணைந்து இருக்கும் புகை படங்கள் காலத்துக்கும் பேசப்படுவையாக இருக்கின்றன. தம்மையும் ஒரு எம்ஜிஆர், ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு சசிகலாவை ஆட்டுவிக்கும் மன்னார்குடி கோஷ்டியின் நாடகங்களைப் பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media