டிவிட்டரில் இனி எல்லாவற்றையும் 360 டிகிரியில் பார்க்கலாம்!

டிவிட்டரில் இனி எல்லாவற்றையும் 360 டிகிரியில் பார்க்கலாம்!

நாம் அனைவரும் சமூக வலை தளத்திற்கு புதிதல்ல, வாட்ஸ்ஆப் , பேஸ்புக் , ட்விட்டர் என அனைத்து விதமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலும் ஸ்மார்ட்போன் கொண்டுள்ள அனைவரும் இதனை பயன்படுத்துகின்றனர். சமூக வலை தளமானது நண்பர்களுடன் பேசுவதற்கு என்பதையும் தாண்டி பல்வேறு நாடுகளில் வாழும் மக்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.

அதனால் சமூக வலைத்தளங்கள் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் சமூக வலைதள நிருவனங்களிடையே மக்களின் வரவேற்பினை பெற பெரும் போட்டியும் நடைபெறுகிறது. இதனால் ஒவ்வொரு நிறுவனமும் புதிய பயன்பாடுகளை வெளிவிட்ட வண்ணம் உள்ளன.

இந்த முறை ட்விட்டர் நிறுவனம் தனது புதிய அப்டேட் ஒன்றினை நேற்று அறிவித்தது. அது 360 டிகிரி வீடியோவை periscope ஆப் போலவே பதிவு செய்யும் வசதி. அதாவது நாம் சாதரணமாக எடுக்கும் வீடியோ முறையை தவிர்த்து நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் நம் நண்பர்களால் பார்க்க முடியும் என்ற அளவிற்கு இதனை பயன்படுத்தலாம். இதனால் உலகில் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல்வேறு இடங்களை நம்மால் சுற்றிபார்க்க இயலும்.

இது தற்போது சோதனை ஓட்டமாக நடைபெற்று வருவதாகவும், இதன் வெளியீடு இந்த வார இறுதிக்குள் இருக்கும் என்றும் அறிவித்தார்.நாம் எடுக்கும் வீடியோக்களை நாம் ட்விட்டரில் பதிவேற்றம் செய்யலாம்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media