ஷங்கர் படத்தில் வடிவேலு வருகிறாரா..?

ஷங்கர் படத்தில் வடிவேலு வருகிறாரா..?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.o படத்தில் வடிவேலு நடிப்பார் என தகவல்கள் வெளியான நேரத்தில், அவர் நடிக்க வாய்ப்பில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் பேசியிருந்த நடிகர் வடிவேலு, 2.o படத்தை எப்போது ஷங்கர் முடிப்பார் என காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஷங்கரின் 2.o படத்தில் காமெடி வேடத்தில் வடிவேலு கலக்க வருகிறார் என ஆங்காங்கே செய்திகள் வெளியான. ஆனால் இத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள வடிலுக்கு நெருக்கமான ஒருவர், படத்தில் நடிக்கக் கோரி வடிவேலுக்கு அழைப்பு கூட வராத பட்சத்தில், வடிவேலால் எப்படி படத்தில் நடிக்க முடியும் என கேட்டுள்ளார்.

2.o படத்தை எப்போது ஷங்கர் முடிப்பார் என வடிவேலு கூறியது, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகளை ஷங்கர் மூலம் தொடங்குவதற்காகத் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் வடிவேலுவிற்கு கடந்த சில வருடங்களாக படங்கள் குறைந்திருந்தது. தற்போது விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் கத்திச் சண்டை படத்தில், மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கியிருக்கும் வடிவேலு காமெடியில் கலக்கியுள்ளார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media