விஜய் டி.வி யை கெஞ்ச வைத்த நடிகை பிரியா வைரலாகப் பரவும் வீடியோக்கள்….

விஜய் டி.வி யை கெஞ்ச வைத்த நடிகை பிரியா  வைரலாகப் பரவும் வீடியோக்கள்….

சினிமா நடிகர்களை தங்கள் உறவுகளாகப் பார்த்து வந்த ரசிகர்கள், சின்னத்திரை நடிகர்களையும் தற்போது அவ்வாறு பார்க்காத தொடங்கியுள்ளனர்.

அதில் அண்மைக் காலமாக ரசிகர்களாலும், குடும்பங்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டவர், விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகி வரும் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற நெடுந்தொடர் நாயகி பிரியா.

அழகு. குடும்பப் பாங்கான தோற்றம், இயல்பான நடிப்பு போன்றவற்றால், பெரும்பாலான தமிழ் குடும்பங்களின் ஒரு அங்கமாகவே மாறிப் போனார் பிரியா.

மயிலாடுதுறையில் பிறந்த அவர், சென்னையில் பள்ளிப்படிப்பையும், பொறியியல் படிப்பையும் முடித்தார்.

ஆனாலும், அது சம்பந்தப்பட்ட பணிகளில் தொடராமல், புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றினார்.

இவரது உண்மையான பெயர் சத்திய பிரியா.

புதிய தலைமுறையில் பணியாற்றும் போதே, அவருக்கு விஜய்.டி.வி யில் வெளியாகும் கல்யாணம் முதல் காதல் வரை என்ற நெடுந்தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு செய்தி வாசிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு, அந்த நெடுந்தொடரிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இடை இடையே, விஜய் டி.வி.யின் முக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றையும் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் அவர் காதலித்து வந்த ராஜவேலு என்பவருக்கும்-பிரியாவுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணம் முடிந்து, ப்ரியா தமது கணவர் ராஜவேலுவுடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருப்பதால், தாம் நடித்து வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் இருந்து விலகிக் கொண்டார்.

வழக்கம்போல, ப்ரியாவுக்கு பதில் வேறு ஒருவர் அதே பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது நடிப்பும் நன்றாகவே உள்ளது.

ஆனாலும் ப்ரியாவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு பதிலாக வருபவரை அவ்வளவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அந்த தொடரின் ரேட்டிங் கடுமையாகக் குறைந்து விட்டது.

இதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த விஜய் டி.வி நிர்வாகம், திருமணத்திற்கு பின்னரும் நடிக்குமாறு, ப்ரியாவை வற்புறுத்தி உள்ளது.

ஆனால் தமக்கு நடிப்பை விட குடும்ப வாழ்க்கையே முக்கியம் என்று, பிரியா நடிக்க மறுத்து விட்டார்.

வேறு வழியின்றி விஜய் டி.வி நிர்வாகம், கெஞ்சியதை அடுத்து, ப்ரியா நடிக்க சம்மதித்ததாக வீடியோ தகவல்கள் வைரலாகப் பரவி வருகின்றன.

தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன், ரசிகர்களை கவர்ந்து இழுத்த மெட்ரோ ப்ரியாவை … இன்றைய ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

5 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தி எண்ணற்ற ரசிகர்களை பெற்று, டாக்டர் பட்டம் வரை வாங்கிய பெப்சி உமா இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.

ஆனால். செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் அறிமுகமான சில நாட்களிலேயே, ஒரே ஒரு நெடுந்தொடர் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் குடும்பங்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் பிரியா.

அவர் இல்லாத அந்த நெடுந்தொடரை பார்க்க மறுக்கும் அளவுக்கு மக்கள் மனதில் பதிந்துள்ள பிரியா, தனியார் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மறக்க முடியாத பெண்தான்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media