ரஜினியின் ‘கபாலி’, அமீர்கானின் ‘டங்கல்’ சாதனையை முறியடிக்க வரும் விஜய்யின் பைரவா டீசர்!

ரஜினியின் ‘கபாலி’, அமீர்கானின் ‘டங்கல்’ சாதனையை முறியடிக்க வரும் விஜய்யின் பைரவா டீசர்!

சென்னை: பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘பைரவா’ திரைப்படத்தின் டீசர் சென்சார் ஆகி சென்சாரில் ‘யூ’ சர்டிபிகேட் பெற்றுள்ளது. மேலும் இந்த டீசர் தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது நாளை அதிகாலை 12.01 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

bairavaa

தற்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஒரு படத்தின் டீசர் யூடியூபில் சாதனை செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் குறியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை யூடியூபில் ஒரே நாளில் அதிக பார்வையாளர்கள் பார்த்த டீசர் என்ற சாதனை ‘கபாலி’ படத்திற்கு இருந்தது. ஆனால் இந்த சாதனையை அமீர்கானின் ‘டங்கல்’ படம் முறியடித்தது.

இந்நிலையில் இப்போதைக்கு விஜய் ரசிகர்களின் டார்கெட் ‘டங்கல்’தான். ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை வரவழைத்து காட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்களாம். நாளை நள்ளிரவு முதல் இந்த சாதனை தொடங்கும் என்றும் கண்டிப்பாக இந்த சாதனையை அடுத்த 24 மணி நேரத்தில் நிகழ்த்தி காட்டுவோம் என்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் சவால் விட்டு வருகின்றனர்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media