‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நிவின் பாலிக்கு வில்லனாகும் விக்ரம்?

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நிவின் பாலிக்கு வில்லனாகும் விக்ரம்?

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கெளதம் மேனன் அடுத்ததாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ‘துருவ நட்சத்திரம்’ குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் அப்படத்தில் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில், கெளதம் மேனன் ‘பிரேமம்’ புகழ் நிவின் பாலியுடன் புதிய படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கவுதம், நிவினிடம் கதை கூறியதாகவும், இதில் நிவின் பாலி இருவேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், நிவினுக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க கெளதம் மேனன் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் விக்ரமை வில்லனாக நடிக்கவைக்க முயற்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

”என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்திற்கு பின்னர் கெளதம் மேனன், விக்ரமுடன் இணைந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்க உள்ளாரா? அல்லது விக்ரம் நிவின் பாலி கூட்டணியில் புதிய படத்தை இயக்க உள்ளாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media