வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார் விவேக்!

December 30, 2016 11:14 am
வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார் விவேக்!

சென்னை:தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவின் மகன் விவேக், வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.

ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோரின் வீடு ,அலுவலகங்கள் உள்ளிட்ட 13 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழக வரலாற்றில் முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இதில், விவேக் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனால் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு ராம மோகன ராவ் மற்றும் விவேக் இருவருக்கும் வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் விவேக் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டியவர், ஒரு வாரம் காலம் தாழ்த்தி இன்று ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media