வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பினால் கைது..!

வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பினால் கைது..!

சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில், தேச பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் மற்றும் மத நல்லிணக்கத்துக்கும் கேடு விளைவிக்கும்வகையில் தகவல் பதிவு செய்யப்படுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பின் பயன்பாடும் அதிகளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதன் மூலம் தேச பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தகவல் பரவுவது அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும், அது குறித்தான புகார்களும் எழுந்துள்ளன. இப்படி தவறான முறையில் வதந்திகளை பரப்புவதால் தேவையில்லாமல் மக்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், இது அரசுக்கும் பெரும் சுமையாக மாறுகிறது. இது போன்ற பிரச்னைகளை கருத்தில்கொண்டு சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

‘அப்படி தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அப்படியான தவறான தகவல் பரப்பும் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பயன்பாட்டாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media