ஊடகங்களை அச்சுறுத்தும் வலைத்தளங்கள்!

ஊடகங்களை அச்சுறுத்தும் வலைத்தளங்கள்!

அண்மைக்காலமாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு, சமூக வலை தளங்கள் கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்த இளைஞர்கள், சென்னையில் நடத்தி காட்டிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான எழுச்சி பேரணியை அதற்கு சாட்சியாகும்.

மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் சமூகத்தில் எந்தவித தவறான தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ஒரு காலத்தில் பத்திரிகை மற்றும் வானொலியில் வரும் செய்திகளை வைத்தே, நாம் நாட்டு நடப்புகளை அறிந்து வந்தோம்.

அதன் பின்னர், தனியார் தொலைக்காட்சிகள் சொல்லும் செய்திகளை ஆதாரமாக வைத்து, விவாதித்துக் கொண்டிருந்தோம்.

விளம்பர வருவாய், அந்தஸ்து மற்றும் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக, பல அச்சு ஊடகங்கள் அதிகார வர்க்கத்தின் ஊது குழலாகி செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயின.

ஒளிபரப்பு தடை படக் கூடாது என்பதற்காக காட்சி ஊடகங்கள் வேறு வழியின்றி அதிகார வர்க்கத்தினரை பகைத்துக்கொள்ள தயக்கம் காட்டின.

இதன் காரணமாக ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்பட்ட ஊடகங்கள் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தன.

இந்த நிலையில் சமூக வலை தளங்களின் வருகை, மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் தளங்களாக விளங்கின.

ஊடகங்களுக்கு முன்பாகவே, வலைத்தளங்கள் பரபரப்பு செய்திகளை கொடுத்த தருணங்களும் உண்டு.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் ஜெயலலிதாவுக்கு விதித்த நான்காண்டு சிறை தண்டனையை, ஊடகங்களுக்கு முன்பாக மக்களுக்கு தெரியப்படுத்தியது சமூக வலை தளங்களே.

அரசு விளம்பர வருவாய், ஒளிபரப்பு என யாருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், மக்கள் மத்தியில் சமூக வலை தளங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதன் காரணமாக, ஊடக செய்திகளை தழுவி சமூக வலை தளங்கள் செய்தி வெளியிட்ட நிலை மாறி, தற்போது சமூக வலை தளங்களை தழுவி செய்தி வெளியிடும் நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இது வரவேக்கப் பட வேண்டிய அம்சம் என்றாலும், செய்திகள் மற்றும் தகவல்களில் தவறு நேராமல், அநாகரீகமான அணுகுமுறைகள் இல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை சமூக வலை தலங்களுக்கு இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media