சசிகலா அமைச்சரவையில் ஓபிஎஸ் இடத்துக்கு முட்டி மோதும் அமைச்சர்கள்! சபாநாயகராக ஓ.பி.எஸ்!

January 7, 2017 6:19 am
சசிகலா அமைச்சரவையில் ஓபிஎஸ் இடத்துக்கு முட்டி மோதும் அமைச்சர்கள்! சபாநாயகராக ஓ.பி.எஸ்!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றிய சசிகலா திடீரென முதல்வர் பதவிக்கும் குறிவைத்தார். அமைச்சர்கள் பலரும் சசிகலாவே முதல்வர் என கூக்குரல் எழுப்பினர். இந்த குரல் தற்போது சட்டென அமைதியாகி இருக்கிறது. இருந்தபோதும் சசிகலாவை வரும் 10 அல்லது 12-ந் தேதி முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதற்கு பகீர பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் சசிகலா முதல்வரானால், அவரது அமைச்சரவையில் இடம்பெறப்போது யார்? யார்? என்ற பட்டியலையும் மன்னார்குடி தரப்பு தீவிரமாக தயார் செய்து வருகிறது. தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு சபாநாயகர் பதவியை தரப்போகிறார்களாம். இதனால், சசிகலா அமைச்சரவையில் “ஓபிஎஸ்” அதாவது 2-வது இடம் யாருக்கு என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது. சசிகலா கணவர் நடராஜனின் நம்பிக்கைக்குரிய தளபதி எடப்பாடி பழனிச்சாமி தனக்குதான் அந்த 2-வது இடம் என நம்பிக்கையோ இருக்கிறார்.

ஆனால், திண்டுக்கல் சீனிவாசனோ தினகரன் மூலம் தமக்கே அந்த 2-வது இடம் கிடைக்க வேண்டும் என்ற வியூகத்தில் காய்நகர்த்தி வருகிறாராம். அதேபோல, ஓ.எஸ். மணியனும் திவாகரன் மூலம் தமக்கே 2-வது இடம் கிடைக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறாராம். இதனிடையே வரும் 12-ந் தேதி சசிகலா பதவி ஏற்கலாமா? என்பது குறித்து ஆளுநர் மாளிகையிடம் கேட்டதற்கு இன்னும் பதில் ஏதும் வரவில்லை என்பதால் பெரும்குழப்பத்தில் இருக்கிறது சசிகலா & கோ.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media