கொலம்பியா|| திருவிழாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள கொலை..! - Seithipunal
Seithipunal


இரண்டு பத்திரிக்கையாளர்கள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌.

கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியில் உள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் சொல் டிஜிட்டல் என்ற இணையதள பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரிகையில் லீனர் மோன்டிரோ ஆர்டிகா (வயது 37) மற்றும் திலியா கான்ட்ரிராஸ் கேன்டில்லோ என்ற இருவர் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் அங்கு நடந்த திருவிழாவில் செய்தி சேகரிக்க சென்றனர்‌. திருவிழா முடிந்தது திரும்பி வந்து கொண்டிருந்தனர். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருவிழாவில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கொலம்பியாவில் கடந்த ஆண்டு வன்முறை, படுகொலை உள்ளிட்டவற்றால் பத்திரிகையாளர்கள் 768 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 journalist killed in colambia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->