வீடியோ: காசு இல்லையென்றால் கிஸ் கொடு.. முத்தத்துக்கு ஆசைப்பட்ட போலீசுக்கு, மேலிடம் அடித்த வசமான ஆப்பு.! - Seithipunal
Seithipunal


பெருவில் கொரோனா அபராதம் விதிக்காமல், பெண்ணிடம் முத்தம் கேட்டு வாங்கிய காவல்துறை அதிகாரி குறித்த காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கொரோனா காரணமாக உலக அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா உலக நாடுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. இதனால் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ள நிலையில், தென்னமெரிக்க நாடான பெருவில் உள்ள தலைநகர் லிமாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தடையை மீறி இளம்பெண் ஒருவர் காரில் சென்ற நிலையில், இதனை கண்ட காவல் அதிகாரி அவரிடம் விசாரணை மேற்கொண்டு, ஊரடங்கு விதிமுறைகளை மீறி வந்ததாக கூறி அபராதம் விதிக்க முடிவு  செய்துள்ளார்.

இதன்போது, அபராத தொகையை கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என்று பெண் கூறவே, காவல் அதிகாரி உடனடியாக தனக்கு முத்தம் வழங்கக்கூறி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, காவல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வைத்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Peru Police Suspended due to getting Kiss form girl when no money to pay penalty


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->