கோமாளி ஜெயம் ரவி போல, கொரோனா மற்றும் ஊரடங்கு கேட்டு ஷாக்கான வாலிபர்.! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த கொரோனா வைரஸ், தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளால் கட்டுக்குள் வந்துள்ளளது. ஆனால், இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் 4 ஆவது கட்டத்தை எட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், கோமாவில் இருந்து மீண்டு வந்த நபர், கொரோனா எப்போது வந்தது என கோமாளி திரைப்படத்தின் ஜெயம் ரவி போல இது 2020 இல்லை என்று அதிர்ச்சி கேள்வி எழுப்பியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்காம் பகுதியை சேர்ந்த 19 வயதான ஜோசப், தீவிர விளையாட்டு வீரராக இருந்து வந்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இங்கிலாந்து நகரில் நடைபெற்ற வாகன விபத்தின் போது படுகாயமடைந்து, மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோமா நிலைக்கு சென்று உள்ளார். ஜோசப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு சில வாரங்களில் ஊரடங்கு அமல் ஆகியுள்ளது. 

சிகிச்சையின் போதே ஜோசப்பிற்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அவரது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. கொரோனா காரணமாக பெற்றோர் மருத்துவமனைக்கு வர முடியாத சூழ்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக அடிக்கடி மகனை பார்த்துள்ளனர். 

தற்போது, உடல்நலம் தேறி கோமா நிலையில் இருந்து மீண்டு வந்த ஜோசப்பிற்கு, அதிர்ச்சி தரும் விதமாக கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசிய பெற்றோர் ஊரடங்கு குறித்து தெரிவிக்கவே, கோமாளி திரைப்படம் ஜெயம் ரவி போல அதிர்ந்து போயுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Coma Patient Shock News about Corona Virus and Lockdown


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->