ஏ.சி-யில் இருந்து பரவும் புதிய வகை வைரஸ்.. இதுவரை 4 பேர் பலி.. அதிர்ச்சியில் உலகநாடுகள்.! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா நாட்டில் தற்போது ஏசியில் இருந்து புதிய வகை நோய் பரவி வருகிறது. இந்நோய் பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நோயின் பெயர் 'லெஜியோனேயர்ஸ். 'லெஜியோனெல்லா'என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 

மேலும், இதே பகுதியில் மேலும் 7 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த செய்தி உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New virus spread in ac


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->