உலகின் பிரபலமான தலைவர் பட்டியல் வெளியீடு.. பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்..! - Seithipunal
Seithipunal


உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்" வருடா வருடம் வெளியிடுவர். அந்த வகையில் சமீபத்தில் உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில், இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரதமர் மோடிக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவரை தொடர்ந்து 2வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 63 சதவீதம்,  3வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 சதவீதம், 4வது இடத்தில் பிரேசில் அதிபர் போல்சனரோ 42 சதவீதம், 5வது இடத்தில் அமெரிக்க அதிபர் பைடன் 41 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடதக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Most Popular Person in The World


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->