'உன்னுடன் செட் ஆகல..' பெண் தோழி மெசேஜுக்கு ஆண் நண்பர் கொடுத்த பதிலால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஃபியானோ என்ற ஒரு இளம் பெண் சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சமீபத்தில் நான் ஒருவருடன் டேட்டிங் செய்வதற்காக சென்று இருந்தேன். அவருடன் எனக்கு இதுதான் முதல் டேட்டிங். 

அவரை சந்தித்து விட்டு வந்த பின்னர் அவருக்கு நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அதில் உங்களுடன் எனக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என்று கூறினேன். அதற்கு என்னுடைய ஆண் நண்பர் கொடுத்த பதில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்த நபர் அன் சக்சஸ்ஃபுல் டேட் என்று குறிப்பிட்டு அன்று நாங்கள் சாப்பிட்ட உணவு மற்றும் குளிர்பானத்திற்கான பணத்தை திருப்பி தர வேண்டும் என்று பட்டியல் போட்டு அனுப்பி இருந்தார். இதை கேட்டதும் என்னால் நம்பவே முடியவில்லை. 

அன்று சந்தித்தபோது அவருக்கும் சேர்த்து பணம் கொடுக்க நான் முயற்சித்தேன். ஆனால், அவர் அதை மறுத்து அவரே பணம் கொடுத்தார். எவ்வளவோ வற்புறுத்தியும், என்னுடைய பணத்தை வாங்க மறுத்தார். இப்பொழுது அவரே பணம் கேட்கிறார். 

இந்த பணத்தை செலவிடுவதால் நான் ஒன்றும் பிச்சை எடுக்க போவதில்லை. ஆனால், இதை போய் பெரிதுபடுத்தி கேட்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." என்று பதிவிட்டு இருந்தார். 

இதை கண்ட நெட்டிசன்கள் பலரும் இது ஒரு புதுவிதமான, புத்திசாலித்தனமான ட்விஸ்ட் ஆக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வர, சிலர் இதை அந்த பெண்ணை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவர் செய்துள்ளார், என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

un successful dating messages makes shock


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->