உள்நாட்டு போரால் தண்ணீர் மட்டுமே உணவு.! 13 வயது சிறுமி, 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


உள்நாட்டுப் போர் காரணமாக பசி மற்றும் பட்டினியால் 13 வயது சிறுமி, 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டு போர் காரணமாக, அங்குள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாட உணவுக்கு அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான அரசு ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடைபெற்று வருகிறது. 

இந்த போரினால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துவிட்ட நிலையில், கொரோனா காரணமாக மேலும் கடுமையாக பொருளாதார சீரழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் ஒரு வேலை உணவு கூட சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 13 வயது சிறுமி ஒருவர், வெறும் 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரை காண வரும் நபர்கள் பலரும் நன்கொடைகள் கொடுத்து வரும் நிலையில், அந்த சிறுமியின் தந்தை உள்நாட்டுப் போரில் இறந்து போயுள்ளார். இதன்பின்னரே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வெறும் தண்ணீரைக் குடித்து பசியாற்றி வாழ்ந்து வந்துள்ளனர். இதனைப்போன்று ஒருவேளை உணவுகூட கிடைக்காமல், 5 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஐ.நா சபையின் அறிக்கை தெரிவிக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yamen Civil War 13 Year child girl 11 Kg Weight due to No Food


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->