2024ஆம் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! 2025ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை குறையுமா? இல்லை மீண்டும் உயருமா?- நிபுணர்கள் சொல்வது என்ன?
Gold price reached the peak of 2024 Will gold and silver prices fall in 2025 No Will it rise again What do the experts say
2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், 2025ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் தங்களின் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை வளர்ச்சி பாதையிலேயே உள்ளன. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது, இது பல நாடுகளின் மத்திய வங்கிகள், குறிப்பாக சீனா, அதிக அளவில் தங்கத்தை வாங்கியதால் ஏற்பட்டது.
2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு இருப்பதாக Stoxkart நிறுவனமும், Heraeus Precious Metals நிறுவனமும் தெரிவித்துள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
இதனால் 2025 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை 15 முதல் 18 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2711 அமெரிக்க டாலர்களாக உள்ளது, இது 2025ல் 2950 டாலர்கள் வரை உயரும் என கணிக்கப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்வதாக கூறப்படுகிறது. உலகளவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவற்றுக்கான உபகரணங்களை தயாரிக்க வெள்ளி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளியின் விலை 2025ல் 7% வரை உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. வெள்ளியின் விலை 2024ஆம் ஆண்டில் 20% வரை உயர்ந்துள்ளதால், 2025இல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நிபுணர்கள், 2025ஆம் ஆண்டில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு தங்கத்திற்கும் வெள்ளிக்குமான முதலீடுகளை பிரித்து, தங்களுடைய போர்ட்போலியோவில் 5 முதல் 8 சதவீதத்தை தங்கத்திற்கு மற்றும் 10 முதல் 15 சதவீதத்தை வெள்ளிக்கு ஒதுக்கவும் என்ற ஆலோசனையை வழங்குகின்றனர்.
English Summary
Gold price reached the peak of 2024 Will gold and silver prices fall in 2025 No Will it rise again What do the experts say