ராயல் என்பீல்டு புதிய ஹண்டர் 350 - ரெட்ரோ, மெட்ரோ, ரெபல்.! இவ்வளவுதான் விலையா?! - Seithipunal
Seithipunal


ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புதிய ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை விபரங்கள்:

• ராயல் என்பீல்டு ஹண்டர் 350 ரெட்ரோ ஃபேக்டர் மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900. 

• ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மெட்ரோ டேப்பர் மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 900. 

• ராயல் என்பீல்டு ஹண்டர் 350 ரெபல் மாடலின் விலை -ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து 900.

 

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இதன் முன்புறத்தில் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. 

• இத்துடன் இதன் பெரிய டயலில் ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஸ்பீடோமீட்டர், பியூவல் லெவல் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த புதிய மாடலில் 41 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் போர்க்குகள், 6 ஸ்டெப் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
 
• பிரேக்கிங்கிற்கு 300 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க், 270 மில்லிமீட்டர் பின்புறம் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. 

• மேலும், ரியர் பேனியர், ஃபிளை ஸ்கிரீன், பில்லியன் சீட் பேக்ரெஸ்ட் மற்றும் சில அக்சஸரீக்கள் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த புதிய மாடலில் 13 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

• 349 சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர் மற்றும் 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டுள்ளது. 

• இந்த மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.  

• இந்த புதிய ஹண்டர் 350 மாடல் மணிக்கு அதிகபட்சம் 114 கி.மீ வேகத்தில் செல்லும். 

• ரிபல் ரெட், ரிபல் புளூ, ரிபல் பிளாக், டேப்பர் ஆஷ், டேப்பர் வைட் மற்றும் டேப்பர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Royal Enfield new Hunter 350 indian market


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->