நடிகர் அஜித்குமாருக்கு உயரிய ' பத்மபூஷன்' விருது; குவியும் பாராட்டுக்கள்..! - Seithipunal
Seithipunal


அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமாருடன், இணைந்து ஆரவ், அர்ஜுன், திரிஷா,ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படம் வருகிற 06-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், 2024 ஆண்டிற்கான பத்ம விருதுகளின் பட்டியலை தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிள்ளது. 

நடிகர் அஜித் தற்போது படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அவர் 03ம் இடம் பிடித்து இருந்தார்.

இந்நிலையில், அஜித்துக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்து இருக்கிறது. Art பிரிவில் அவருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் 03வது உயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith Kumar receives Padma Bhushan award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->