பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ முடியும்; நடிகை சமந்தா..! - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துண்டவர். இவர்கள் இருவருக்கும் விவாகரத்து என்ற செய்தி வெளியானதும் திரைத்துறையினர் மற்றுமன்றி ரசிகர்களும் அதிர்ச்சில் ஆழ்ந்தனர். ஆனால், விவாகரத்து பெற்ற  பின்னர் நாகசைதன்யா பிரபல நடிகை  சோபிதா துலிபாலாவை காதலித்து 02-வது திருமணமும் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமந்தாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். அத்துடன், 'சிட்டாடல் ஹனி பன்னி' வெப் தொடரை இயக்கி பிரபலமான ராஜ் நிடிமோரை சமந்தா காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளி வந்துள்ளன.

ஆனால், திருமணம் குறித்து சமந்தா கூறும்போது, ''எனது வாழ்க்கையில் திருமண பந்தத்தை கடந்து வந்துவிட்டேன். பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பை சமூகத்தில் உருவாக்கி வைத்துள்ளனர்.

திருமணமாகி குழந்தை பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் முழுமை அடைகிறார்கள் என்றும் பேசுகின்றனர். ஆனால் நான் அதில் உடன்படவில்லை. திருமணமாகாமல் தனியாக இருப்பதிலும் மகிழ்ச்சி இருக்கிறது. பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னம்பிக்கையோடும், மன உறுதியோடும் வாழ முடியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Samantha says women can live without getting married


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->