அமரன் 100 நாட்கள்; 'மேஜர் முகுந்தை நிரந்தரமாக கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்'; ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்..! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், நடிகை சாய் பல்லவி முகுந்தின் மனைவி இந்துவாகவும் நடித்திருந்தனர்.

உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியானது. இப்படம் இதுவரை சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அத்துடன், ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில்,இவர் நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதோடு, பாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

https://x.com/RKFI/status/1887841403415540111

இந்த நிலையில், 'அமரன்' படம் வெளிவந்து 100 நாட்களை தாண்டிய நிலையில் தனது எக்ஸ் தளத்தில் மேஜர் முகுந்த் குறித்து பதிவிட்டுள்ளார். பதிவில் 'ஆளுமையின் மறு உருவம் இந்து ரெபேக்கா வர்கீஸ். நீங்கள் எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை படமாக எடுக்க அனுமதித்ததற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்.மேஜர் முகுந்தை நிரந்தரமாக கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்' என குறிப்பிட்டுள்ளார்.
 

https://x.com/Rajkumar_KP/status/1887852531000258783


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amaran is the world of Indhu that has Major Mukund permanently Rajkumar Periyasamy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->