இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளி - உதயநிதி ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


"இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும், தமிழ்நாட்டை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்" என்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம், 

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும் நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 DCM Udhayanidhi Stalin TN Cabinet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->