எனக்கு ரத்தம் சிந்துகிறது! - நடிகை வேதிகா எக்ஸ் வலைதளத்தில் பரபரப்பு பதிவு! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம், நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், நடிகர்கள்  பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது பட்டாசு வெடித்து பேனருக்கு பால் அபிஷேகம் செய்து மேளதாளத்துடன் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஆந்திராவிலுள்ள ஒரு திரையரங்கில் ஆட்டை வெட்டி அதன் இரத்தத்தை ஜுனியர் என்.டி.ஆரின் பேனர் மீது தெளித்து அவரது ரசிகர்கள் கொண்டாடியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகை வேதிகா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், இது மோசமானது. நிறுத்துங்கள் என்றும், அந்த அப்பாவி ஜீவனுக்காக எனது ரத்தம் சிந்துகிறது. இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது என்றும், இவ்வளவு சித்திரவதை ஒரு அப்பாவி குரலற்ற உயிரினத்திற்கு எப்படி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I have bleeding actress vedhika X sensational post on the website


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->