வலைத்தளங்களில் வைரலாகும் இறுகப்பற்று படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


வலைத்தளங்களில் வைரலாகும் இறுகப்பற்று படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. கும்கி, இவன் வேற மாதிரி, நெருப்புடா, வெள்ளகாரத்துறை, வீர சிவாஜி, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர் மனதின் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகிவரும் 'இறுகப்பற்று' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விதார்த், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். 

இந்த நிலையில் இறுக்கப்பற்று படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது விக்ரம் பிரபுவின் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

irukapatru movie first look poster released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->