வெளியானது "லப்பர் பந்து" படத்தின் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் நடிகர்களாக நடிக்கும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரிக்கின்றது. இந்தப் படத்தில், சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். 

இவர்களுடன் காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், இந்தப் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lubber pandhu movie poster released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->