அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல சின்னத்திரை நடிகை!
rare disease suffering Rakshita Mahalakshmi
தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரின் மூலம் இவர் முதல் முதலில் ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதன் பிறகு விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் மற்றும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து தனக்கென சின்னத்திரையில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரக்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் அதிகமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில் ரக்ஷிதா மகாலட்சுமி அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு அரிய வகை நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில், ஹார்மோன் பிரச்சனை உள்ளதாகவும் உணவை நுகர்ந்து பார்த்தாலே உடல் எடை ஏறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார். அதற்காக மருத்துவரை அணுகிய போது ஆரோக்கியமான உணவு முறையின் மூலம் இந்த நோயினை குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக ரக்ஷிதா தெரிவித்துள்ளார்.
ரக்ஷிதாவின் இந்த அரியவகை நோய் பாதிப்பு குறித்து அவரது ரசிகர்கள், இப்படி எல்லாம் கூடவா நோய் இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
rare disease suffering Rakshita Mahalakshmi