அடுத்தடுத்து சோகம் - சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.!
serial actor vj chithra father sucide
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.
நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. இதையடுத்து சித்ரா மரண வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரையும் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் ஓய்வுபெற்ற காவலருமான காமராஜ் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2020 டிசம்பரில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது அவரது தந்தையும் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
serial actor vj chithra father sucide