தவெக தலைவர் விஜய்க்காக 'தலைவன் நீயே, தொண்டன் நானே' ஆல்பம் பாடல்; நடிகர் சௌந்தரராஜா தயாரிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் நடிகராக இருப்பவர் சௌந்தரராஜா. இவர் நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு, மரம் வளர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். அத்துடன், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியான நாள் முதலே விஜய்க்கு ஆதரவாக தெரிவித்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார். 

தவெக கட்சியின் கொடி வெளியிட்டதும் அதனை மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தினார்.அத்துடன், மாநாட்டுக்கு சைக்கிள் பேரணி ஆகியவற்றை முன்நின்று நடத்தி வருகின்றார். 

இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 'தலைவன் நீயே, தொண்டன் நானே...' என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டுள்ளார். இந்த பாடலுக்கான பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. இந்த பாடலை டாக்டர் நந்துதாசன் நாகலிங்கம் எழுத, சந்தோஷ் இசையமைக்கிறார்.

நிரோஜன் பாடலை இயக்கவுள்ளார். இந்த பாரலுக்கு நடன இயக்குநராக பிரசாந்த்தும், ஒளிப்பதிவாளராக சக்தி பிரியனும் பணியாற்ற உள்ளனர். இந்தப் பாடலில் நடிகர் சௌந்தரராஜா நடிப்பதோடு,  தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மதுரை டூரிங் டாக்கீஸ் மூலம் தயாரிக்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thalaivan Neeye Thondan Naane album song for TVK Leader Vijay produced by actor Soundararaja


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->