மொழி கற்பதில் அழுத்தம் என்றால் மற்ற பாடங்கள் எப்படி? - நடிகை கஸ்தூரி
there pressure learning language what about other subjects Actress Kasthuri
நடிகை கஸ்தூரி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,"இந்தியாவில் 3 மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை.
தமிழ்நாட்டில் மட்டும் மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் எனத் தெரிவித்தால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்?
கணக்கு கஷ்டம் என்றால் அதனை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட முடியுமா?
இலகுவான முறையில் மாற்றியமைக்கலாமே தவிர கற்காமல் விடக்கூடாது " எனத் தெரிவித்தார்.
English Summary
there pressure learning language what about other subjects Actress Kasthuri