கல்லூரிகளில் தாய் மொழி தினத்தை சிறப்பாக கொண்டாட பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தாய்மொழி தினத்தை விமரிசையாகவும், சிறப்பாக கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக  உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி தாய்மொழி தினமாக அனுசரிக்கப்படும் என யுனெஸ்கோ முன்மொழிந்ததன் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள மொழி சார்ந்த கலாச்சார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் 21ஆம் தேதி தாய்மொழி தினத்தை வெகு விமர்சையாகவும், சிறப்பாகவும் கொண்டாட வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்தியாவின் பேசப்படும் பல்வேறு மொழிகளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், பிற இந்திய மொழிகளை கற்றுக் கொள்ளவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொழி சார்ந்த கலை நிகழ்ச்சிகள், குழு விவாதங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் கண்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும் பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. 

மேலும் தாய்மொழி தினம் கொண்டாட்டம் தொடர்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அறிக்கை தயார் செய்து பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother tongue day at Colleges


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->